நவீன வசதிகளுடன் சம்மாந்துறையில் மீண்டும் திறக்கப்படும் HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB PLC, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் உள்ள வர்த்தக சமூகத்தினருக்கான வங்கி வசதிகளை மேம்படுத்தும் வகையில், சம்மாந்துறை ஹாஜிரா வீதி இலக்கம் 69 என்ற விலாசத்தில் வாடிக்கையாளர் நிலையத்தை வைபவ ரீதியாக மீண்டும் திறந்து வைத்தது.

ஒவ்வொரு வாரமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வர்த்தக செயற்பாடுகளுக்காக திறந்திருக்கும், விசாலமான புதிய வளாகத்தில் டிஜிட்டல் கட்டண வசதிகளுடன் முழு அளவிலான வங்கிச் சேவைகளும் உள்ளன.

HNBஇன் நுகர்வோர் விவகார, சிறு மற்றும் நடுத்தர வங்கியியல் பிரதிப் பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன, சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.M. ஹனிஃபா, HNBஇன் வர்த்தக வங்கிச் சேவைகள் (Wholesale Banking) தொடர்பான பிரதிப் பொது முகாமையாளர் தமித் பல்லேவத்த, HNBஇன் இஸ்லாமிய வங்கி நடவடிக்கைகள் பிரதானி ஹிஷாம் அலி ஆகிய அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த வாடிக்கையாளர் மத்திய நிலையம் மக்களின் நன்`மைகாக திறந்து வைக்கப்பட்டது.

“கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இது சம்மாந்துறை மக்களின் தொழில் முயற்சியில் அளப்பரிய ஆர்வத்தை வெளிப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் மிகவும் விரும்பப்படும் பிரதேசமாக மாற்றியுள்ளது.

இப்பகுதியில் உள்ள சில்லறை, பெருநிறுவன மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மூலம் எங்கள் வாடிக்கையாளர் தளத்துடன் கூட்டு சேர்ந்து அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்.” என HNBஇன் நுகர்வோர் சேவைகள், சிறிய மற்றும் நடுத்தர வங்கி சேவைகள் பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமன்ன தெரிவித்தார்.

பிராந்தியத்தில் தனது இருப்பை வலுப்படுத்தி, HNB வளர்ந்து வரும் வணிக சமூகமான HNB Payfast, HNB MOMO, HNB Solo, HNB AppiGo மற்றும் பிற டிஜிட்டல் தளங்களை எளிதாகவும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட வங்கிச் சேவைகள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்ட கட்டண அணுகல்களை வழங்குகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles