” சிங்கங்கள் பன்றி பண்ணைக்குள் செல்லாது, எனவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமையும் புதிய கூட்டணியில் நாம் இணையமாட்டோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமை குறித்தும், மைத்திரிபால சிறிசேன தரப்பால் உருவாக்கப்பட்டுவரும் புதிய கூட்டணி குறித்தும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியில் பொய்யர், அவருடன் கூட்டு அரசியல் பயணத்துக்கு தயாரில்லை. பன்றிகள்தான் பன்றி பண்ணைக்குள் செல்லும், மாடுகள் மாட்டு தொழுவங்களுக்குள் செல்லும். நாம் சிங்கங்கள் இழு நிலைக்கு விழமாட்டோம். சிலவேளை எமது பக்கம் உள்ள சில பன்றிகள் அவற்றின் பன்னை நோக்கி செல்லக்கூடும்.” எனவும் விமல் வீரவன்ச கூறினார்.
அதேவேளை, எட்கா மட்டுமல்ல எம்சிசி உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான பேச்சுகளும் இடம்பெறுகின்றன. இவை தொடர்பில் நாட்டில் உள்ள முற்போக்கு சக்திகள் குரல் எழுப்பாமை கவலையளிக்கின்றது.” –எனவும் அவர் குறிப்பிட்டார்.










