நாடாளுமன்றத்திற்கு ஒரு சட்டம் மக்களுக்கு வேறு சட்டமா? சஜித் கேள்வி

நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டமும் நாட்டு மக்களுக்கு வேறு சட்டமும் நடைமுறையில் உள்ளதா என்பதை சபாநாயகர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (10) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலும், சபாபீடத்திலும் பொதுச் சொத்துச் சட்டம் செல்லாது என்ற பொய்யான கருத்து நேற்று வெளியிடப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குற்றவியல் சட்டம் இந்த சபையில் செல்லுபடியாகாதா என்பதை சபாநாயகர் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள அதிகாரங்கள் குறித்து நாட்டையே தவறாக வழிநடத்தும் சம்பவமொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 52 நாள் ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்ட காலப்பகுதியில் சபையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் வழங்கிய கருத்து குறித்து சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

Related Articles

Latest Articles