எதிரணிகளை வழிநடத்துவதற்காக நாடாளுமன்றம் வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
எதிரணி உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை ரணிலிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், நாடாளுமன்றம் வருவதற்குரிய திட்டம் தன்னிடம் இல்லை எனவும், நாடாளுமன்றத்துக்கு வெளியில் அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருவதாக இருந்தால் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு தயார் என ரவி கருணாநாயக்க மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
