சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்பின்னர் இதுவரை 10 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
