நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்வதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் விசேட கூட்டமொன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்காளிக்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆட்சியை பிடிப்பதற்காக கூட்டணியாக களமிறங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சஜித் பிரேமதாசவே தலைமைப்பதவியில் தொடரவேண்டும் எனவும், அதில் மாற்றம் வராது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என சிலர் யோசனை முன்வைத்திருந்தாலும் பெரும்பாலானவர்கள் அதற்கு உடன்படவில்லை என தெரியவருகின்றது.
