நாட்டை முழுமையாக முடக்குவதற்கு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
எனினும், கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்படும் எனவும், அவை எவ்வாறான நடவடிக்கைகள் என்பது தொடர்பில் இராணுவத் தளபதி இன்று மாலை தெளிவுப்படுத்துவார் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.