நாட்டின் நெருக்கடி நிலைமை தீரும் வரை சம்பளமின்றி பணியாற்றுவதற்கு தீர்மானம்-சாந்த பண்டார

நாட்டின் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் வரை இராஜாங்க அமைச்சர்கள் சம்பளமின்றி பணியாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் சில தியாகங்களை மேற்கொள்வதற்கான திறன் அனைவருக்கும் இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நலன் கருதி அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அதனை கட்சி தவறாகப் புரிந்துகொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், சிலர் தம்மை கட்சியில் இருந்து நீக்க விரும்புவதாகவும் ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles