நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை-அரசாங்கம்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்ட பின்னர், எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பின் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

Related Articles

Latest Articles