நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் -வஜிர அபேவர்தன

நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன  தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் எவ்வித நோக்கமும், திட்டமும் இன்றி நாட்டை ஆட்சி செய்வதனால் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காலி – ஹக்மீமன பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

காலி மாவட்டத்தில் தேயிலை தொழிற்துறைகளில் ஈடுபடுவோர் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். உர தட்டுப்பாடு காரணமாக தேயிலை செய்கை வழமைக்கு திரும்ப இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும்.

உலகில் தரமான உரத்தை 350 ரூபாவிற்கு வழங்க முடியாது. அரசாங்கம் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தது. தரம் குறைந்த உர வகைகளை பயன்படுத்துவதனால் மண் வளம் இழக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles