நாட்டில் மேலும் ஆயிரத்து 732 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 463 பேர் குணமடைந்துள்ளனர். 19 ஆயிரத்து 717 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். கொரோனாவால் 786 பேர் உயிரிழந்துள்ளனர்.










