நாட்டில் 5 லட்சம் மின் பயனாளிகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன , லட்சக்கணக்கானோருக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் அனுப்பட்டுள்ளது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் கனமழை பெய்தது. இதனால் நீர்மின் உற்பத்தி அதிகரித்தது. அதன்மூலம் இலங்கை மின்சார சபை பெரும் இலாபம் ஈட்டியது. எனவே, மின் கட்டண அதிகரிப்புக்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். ஆனால் அநீதியான முறையில் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றது.
மின் கட்டணம் செலுத்த முடியாததால், ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மின்சார நுகர்வோரின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்படும் என மேலும் பல இலட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.
அபயராம விகாரையில் கூட சட்டவிரோதமாக மின்சார இணைப்பை துண்டிக்க முற்பட்டுள்ளனர். நீர் மின் உற்பத்தி அதிகரித்து மின்சார சபை கோடி கோடியாக இலாபம் ஈட்டும் போது, தேவையில்லாமல் மின்கட்டணத்தை அதிகரித்து 50 இலட்சம் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது. இது நியாயமா?” – என்றார்.










