நாட்டை முன்னேற்றும் புதிய பொருளாதார திட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பம்

அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார0 வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எனவே, புதிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பிடகோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று (06) இடம்பெற்ற அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

18 மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர் சமூகம் மேற்கொண்டுள்ள பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அடுத்த தசாப்தத்தில்.எனவே, தற்போது நிலையான பொருளாதாரத்தை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கொண்டு செல்ல புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அதில் நவீன பொருளாதார முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் வங்குரோத்து நிலையை அடைந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை விரைவாக மீண்டு வர முடிந்துள்ளதாக உலக நிதி நிறுவனங்கள் கூட ஒப்புக்கொள்கின்றன என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊழியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசில்கள் வழங்கி வைத்ததுடன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25 ரூபா பெறுமதியான நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் அட்டையும் வெளியிடப்பட்டது.

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பாடல் மற்றும் கொடி என்பனவும் அறிமுகம் செய்யப்பட்டதுடன், அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் “ஈ மதிப்பீடு” முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

மதிப்பீட்டுத் துறை செயல்முறை போர்த்துகேயரின் காலனித்துவக் காலத்திற்கு முந்தையது. பிரிட்டிஷ் காலத்தில், கணக்கெடுப்பு மற்றும் மதிப்பீடு செயல்முறை முன்னோக்கி கொண்டு வரப்பட்டது. 1923 இல், மதிப்பீட்டாளர் பதவி உருவாக்கப்பட்டது.

1972 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலக் கொள்கையின் மூலம் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பங்கு மேலும் விரிவாக்கப்பட்டது. அதன்படி, மதிப்பீட்டுத் திணைக்களம் தற்போது புதிய யுகத்தில் நுழைந்துள்ளது. அங்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் மதிப்பீடுகளுக்கு மனிதவளம் தேவைப்படுகிறது. அதற்காக மதிப்பீட்டாளர்களை உருவாக்கும் வகையில் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை உள்வாங்குவதை அதிகரிக்க வேண்டும்.

மேலும், எதிர்காலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சொத்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும். வரி வசூலிக்கும் முறைக்கு மதிப்பீட்டின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. எனவே, இந்த ஆண்டு முதல் மதிப்பீட்டு செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்படுவதை வரவேற்கிறேன்.

கடந்த ஆண்டு நாம் நாடென்ற வகையில் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டோம். அந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் அரச அதிகாரிகளும்,முழு நாட்டு மக்களும் பெரும் தியாகங்களைச் செய்தனர். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இம்மாத நடுப்பகுதியில், நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிக்க உள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார முறைகளின்படி முன்னேற வேண்டும். அப்படி இல்லாமல், பழைய பொருளாதார முறைகளை அமுல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியாது.

மத்திய வங்கி ஏற்கனவே பணம் அச்சிடுவதை நிறுத்திவிட்டது. அத்துடன் அபிவிருத்திக்காக அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் இல்லாமல் பொருளாதார முன்னேற்த்தை எட்ட முடியாது. நாட்டுக்கு நிதி ஒழுக்கம் தேவை. பொருளாதாரத்தை நிதி ஒழுக்கத்துடன் நிர்வகித்தால், எதிர்காலத்தில் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க முடியும்.

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளி மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், அரசின் செலவினங்களை குறைக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் புதிய திட்டங்களை தயாரித்துள்ளோம்.

சுற்றுலாத் துறையின் மூலம் அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். அடுத்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சமாக உயர்த்தினால் இந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளைப் பெற முடியும் என நம்புகின்றோம்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 இலட்சம் ஏக்கர் நிலத்தை மக்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதில் மதிப்பீட்டுத் துறைக்கு பெரும் பங்கு உள்ளது. மதிப்பீட்டுத் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கல் பணியை சிறப்பாகச் செய்யும்.

எரிசக்தி துறையிலும் புதிய அணுகுமுறைகள் அவசியம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். காற்றாலை மூலம் 35 கிகாவோர்ட்டும், சூரிய சக்தி மூலம் 200 கிகாவோர்ட்டும் மின் உற்பத்தி செய்ய முடியும். இந்த நாட்டில் நுகர்வுக்கு 50 கிகாவோர்ட்டினை விட குறைவாகவே மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, எரிசக்தி துறையின் ஊடாகவும் அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். செயற்கை நுண்ணறிவு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டு, டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, அரசாங்கத்தின் பிரதம மதிப்பீட்டாளர் புஷ்பா முத்துகுமாரன, தபால்மா அதிபர் ருவன் சத்குமார மற்றும் அரசாங்க மதிப்பீட்டு திணைக்கள ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles