நானுஓயாவில் கார் விபத்து – ஒருவர் காயம்! கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகளே அவதானம்!!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் வெண்டிக்கோணர் பகுதியில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு தொழிலுக்காக வருகைத்தந்த வைத்தியர் ஒருவரின் காரொன்றே சீரற்ற காலநிலையால் பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டமையால் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் பயணித்த 25 வயதுடைய பெண்ணின் உடலில் மோதி
வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வீதியில் நடந்து சென்ற பெண் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்குச் சென்ற நானுஓயா பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles