நானுஓயாவில் ரயிலுடன் மோதி ஆட்டோ விபத்து – தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள்

நானுஓயா, வாழைமலை பகுதியில் ஆட்டோவொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த ஆட்டோ ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளையிலேயே இன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே ஆட்டோ இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதோடு , ஆட்டோவில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ரயில் கடவையில் இதற்கு முன்னரும் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும், அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles