நானுஓயாவில் விபத்து – ஆட்டோ சாரதி காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த காரின்மீது, லிந்துலையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ஆட்டோ மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த ஆட்டோ சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles