நானுஓயா, வங்கிஓயா தோட்டத்தில் இன்று காலை மரம் இழுப்பதற்காக வந்திருந்த வாகனம், சுமார் 30 அடி பள்ளத்தில், குடை சாய்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
43 வயதுடைய கினிகத்தனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே பலியாகியுள்ளார்.










