கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிரிமிட்டி 476ஃயு கிராம சேவகர் பிரிவினர் ஒன்றிணைந்து நானுஓயா டெஸ்போட் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று (25) காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஊழலில் ஈடுபடுவதாகவும், நேர்மையாக செயற்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
குறிப்பாக ஒரு சிலருக்கு மாத்திரம் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுவதாகவும், மேற்படி சமூர்த்தி உத்தியோகத்தரின் உறவினர்களும் இதில் உள்ளடங்குகின்றனர் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்றுதிரண்டு ,
“ அரசாங்கத்தால் கிடைக்கும் உதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், நேர்மையாக செயற்படும் அதிகாரிகள் இன்றி மன உளைச்சலை ஏற்படுத்தாதே, உங்களின் சுயநலன்களுக்காக பொது மக்களின் விளையாடாதே, அதிகாரிகளின் தேவைக்காக பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்காதே, சுயநலத்துடன் செயல்பட்டு பொது மக்களின் மனங்களை நோகடிக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
டி.சந்ரு செ.திவாகரன்










