தொல்பொருள் பெறுமதிமிக்க தங்கம் என சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையொன்றினை நான்கு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் வைத்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட பொலிஸ் அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலொன்றுக்கமைய (29) இரவு மொறகொட பொலிஸ் பிரிவின் மெகொடவெவ பகுதி வீடொன்றில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் பெறுமதிமிக்க புத்தர் சிலையொன்றையும் போர் 12 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் சிலவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய உணகொள்ளாவ,மெகொடவெவ,மொறகொட பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
புத்தர் சிலையினை கொள்வனவு செய்வதற்காக வேண்டி விசேட பொலிஸ் அதிரடிப்படையினரே மாறுவேடம் பூண்டு சென்றுள்ளனர் என்பது மேலும் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வேண்டி சந்தேக நபரையும் கைப்பற்றிய புத்தர் சிலையும் மொறகொட பொலிஸ் நிலையத்தில் அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஹிந்த குணரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.










