நான் கூறிய நிதி அமைச்சர்தான் ஹர்ஷ: அவருடன் எவ்வித பிரச்சினையும் இல்லை!

ஹர்ஷ டி சில்வாவுக்கும், தனக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கொழும்பு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்படாமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சஜித்திடம் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அவர் வழங்கி பதில்களும் வருமாறு,

கேள்வி – தனக்கு கொழும்பு மாவட்ட தலைவர் பதவி கிடைக்கவில்லை என ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளாரே…

பதில் – அவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை. ஊடகள் தலைப்புச்செய்தியொன்றை பெறுவதற்கு முற்படுகின்றன…

கேள்வி – அவர் கவலையடைந்த நிலையில்தானே சென்றார்….?

பதில் – இல்லை, அவர் கவலையடையவில்லை. நான் கூறிய நிதி அமைச்சர் அவர்தான்.

கேள்வி – அவருடன் (ஹர்ஷ) ஏதேனும் பிரச்சினை உள்ளதா?

பதில் – என்ன பிரச்சினை? கட்சியின் பொதுச்செயலாளர் மொனறாகலை மாவட்ட தலைவர், நான் கொழும்பு மாவட்ட தலைவர். இதில் என்ன பிரச்சினை?

Related Articles

Latest Articles