ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பிரதான தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், நாமல் ராஜபக்ச சர்வமத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
விகாரைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக 5 நாள்கள்வரை ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு 21 ஆம் திகதி முதல் தேர்தல் பிரசார நடவடிக்கை இடம்பெறும்.
