சர்வக்கட்சி அரசில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதை தமது அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக ‘பிளக் கெப் மூமன்ட்’ தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பால் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சியையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் பின்னணியில் நாமல் இருப்பதாக நம்பப்படுகின்றது.
இவ்வாறானதொரு நிலையிலேயே மேற்படி அமைப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
