போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்சவை நாட்டின் அடுத்த ஜனாதிபதி ஆக்குவதற்குரிய வேலைத்திட்டம் உள்ளுராட்சி தேர்தல் ஊடாக ஆரம்பமாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உள்ளுராட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகிவருகின்றது.
இந்நாட்டின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச என்ற விடயத்தில் மாற்று கருத்து கிடையாது. போரை முடித்து, நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்திய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. எனவே, அவரது முகாமில் அடுத்த தலைவர் நாமல்தான்.
எனவே, நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்குரிய வெலைத்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கை இந்த தேர்தல் ஊடாக ஆரம்பமாகும்.
இந்நாட்டுக்கு வேலை செய்த அணி ராஜபக்ச அணிதான் என்பதை இந்நாட்டில் சோறு சாப்பிடும் மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். தற்போதைய ஆட்சியின்கீழ் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை.” – என்றார்.