நாமலை பிரதமராக்க பதவி துறக்கிறாரா மஹிந்த?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவது குறித்து பரீசிலித்துவருகின்றாரென தகவல் வெளியாகியுள்ளதாக ‘லங்கா சீ நியுஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலை, நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை தக்கவைத்தல் உட்பட மேலும் சில காரணங்களால், இளம் அரசியல்வாதி ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு வழிவிட்டு, பிரதமர் பதவி விலகுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த பதவி விலகினால், புதிய பிரதமராக நாமல் ராஜபபக்ச நியமிக்கப்படலாம் எனவும், டலஸ் அழகப்பெரும், ரமேஷ் பத்திரண ஆகியோரின் பெயர்களும் பரீசிலனையில் இருப்பதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்னரும் பிரதமர் பதவி விலகுவார் என தகவல்கள் வெளியானபோதும், அந்த தகவல்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles