” எங்கள் சொந்த வீடு தமிழ் முற்போக்கு கூட்டணி. எமக்கு வேறு வீடு கிடையாது. ” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் படத்துடன் இந்த பதிவு பதிவிடப்பட்டுள்ளது.
” அரசு செலவில் கட்சி நிகழ்ச்சியை நடத்தி விட்டு, சொந்த வீடு, புகுந்த வீடு என்று வசனம் பேசுவது. அழைப்பு தேவையா? என கேட்பது. அப்புறம் அழைப்பு அனுப்பினேன் என்பது. நேரடியாக பேசினேன் என கூசாமல் பொய் சொல்வது. எல்லாம் மாற்றி மாற்றி அலுப்பை தரும் வேண்டாத வெட்டி கதைகள்.
அழைப்பு வரவில்லை. ஆகவே போகவில்லை. அதோடு இந்த விஷயம் முடிந்தது.
இந்த கதையை நிறுத்தி விட்டு மலையக மக்களுக்கு ஜனாதிபதி உறுதியளித்த காரியங்களை செய்ய வேண்டும்.
அதுவும் எமது 7பேர்ச் தான் 10பேர்ச் ஆகியுள்ளது. எமது “சிறுதோட்ட உடைமையாளர்” கோஷம்தான் பேசப்பட்டது. நாம் மோடியிடம் 2017ல் கேட்டு வாங்கிய 10,000 வீட்டுத்திட்டம்தான் இப்போது ஆரம்பிக்க (?) பட்டதாம்.
சொந்தமாக எதுவும் இல்லாவிட்டாலும், இப்போ சொன்னதையாவது செய்ய வேண்டும்.
கூடவே அந்த எயார்-போர்ட்டையும் கட்டனும்.” – எனவும் கூறப்பட்டிருந்தது.
இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த பதிவு இடப்பற்றிருந்தது.
இது குறித்து கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரத்திடம் வினவினோம். அந்த பதவி பற்றி தனக்கு தெரியாது, தான் அது பற்றி பதிவிடவில்லை எனக் குறிப்பிட்டார்.
மலையக மக்கள் முன்னணி தரப்புக்கும் இந்த பதிவு பற்றி தெரியாது என அறியமுடிகின்றது.










