நாய் கடித்து மூதாட்டி பலி: யாழில் சோகம்!

யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்தார்.

வண்ணார் பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் வடிந்த நிலையில் உரிய சிகிச்சை பெறாமல் தவிர்த்துள்ளார்.

சில வாரங்களுக்கு பின்னர் மூதாட்டிக்கு தோல் வருத்தம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இன்று உயிரிழந்தார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related Articles

Latest Articles