நால்வரின் உயிரை பலிகொடுத்த கோர விபத்து: சாரதி கஞ்சா போதையில் இருந்ததாக தகவல்

அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற மூன்று பஸ்கள் மோதிய கோர விபத்தில் உயிரிழந்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பஸ் சாரதி, விபத்து இடம்பெற்றபோது கஞ்சா மற்றும் மதுபானம் அருந்தியிருந்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சாரதியின் சிறுநீர் மாதிரியைப் பரிசோதனை செய்தபோது, அதில் கஞ்சா மற்றும் மதுபானம் ஆகிய இரண்டினதும் தடயங்கள் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 10ஆம் திகதி கண்டி – யாழ்ப்பாணம் (A9) வீதியில் ரம்பேவ, வெலிஓயா சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய இந்த விபத்தில், இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 76 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜனகபுரவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஆரம்பமானது.

இதன்போது, வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸின் பின்னால் மோதியதையடுத்து, மூன்று பஸ்களும் விபத்துக்குள்ளாகின.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles