நாட்டில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்

ஓகஸ்ட் 16ஆம் திகதி நாளை முதல் இரவு நேரங்களில் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை தினமும் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பிதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6000த்தைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் கொவிட் தொற்றினால் 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles