தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09.08.2026) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 2,94,089 மாணவர்கள் தோற்றவுள்ள அதேவேளை, நாடு பூராகவும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை நேர அட்டவணை:
காலை 9:30 மணி – பரீட்சை ஆரம்பமாகும்.
முதலில் பகுதி II (Part II) பரீட்சை நடைபெறும். இதற்கு 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
சிறிய இடைவேளைக்குப் பிறகு, காலை 11:15 மணிக்கு பகுதி I (Part I) வினாத்தாள் வழங்கப்படும். இதற்கு 1 மணிநேரம் வழங்கப்படும்.
பரீட்சை நண்பகல் 12:15 மணிக்கு நிறைவடையும்.
பெற்றோருக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:
பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே (காலை 8:30 மணிக்கு) பிள்ளைகளைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து வர வேண்டும்.
பெற்றோர் பரீட்சை நிலையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை. இடைவேளை நேரத்திலும் வளாகத்திற்குள் செல்ல முடியாது.
எடுத்துவரக் கூடியவை & தடைகள்:
அனுமதிக்கப்பட்டவை: பேனா, பென்சில், அழிப்பான் (Eraser) மற்றும் தெளிவான போத்தலில் (Clear Bottle) குடிநீர்.
தடைசெய்யப்பட்டவை: கைப்பேசி (Mobile phone), ஸ்மார்ட் கடிகாரம் (Smart watch) மற்றும் பிற இலத்திரனியல் உபகரணங்கள்.
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் ‘மலையக குருவி’ இணையதளத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!
