மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் நாளை 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மடு திருத்தலத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.
ஜனாதிபதியின் மடு திருத்தல விஜயத்தை ஒட்டி மடு திருத்தலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரும் நாளையதினம் மடுத் திருத்தலத்திற்கு வருகை தர உள்ளமையினால் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.










