நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை(26) முதல் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளமை காரணமாக இவ்வாறு நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை இடமபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles