நாளை 10 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (29-04-2023) 10 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எந்திரேகோட்டே, நாவல, கொஸ்வத்தை, ராஜகிரிய மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அருகில் உள்ள ஏனைய வீதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொலன்னாவ நீர்விநியோக நிலையத்தின் பிரதான கட்டமைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles