நாவலப்பிட்டியில் நேருக்கு நேர் மோதுண்டு பஸ் விபத்து – சாரதி உட்பட பலர் காயம் !

அட்டன் கண்டி பிரதான வீதியின் நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் கண்டியிலிருந்து அட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸுமே இன்று காலை 07.30 மணியளவில் நாவலப்பிட்டியில் நேருக்கு நேர் மோதுண்டுள்ளது

விபத்திஸ் பஸ்ஸின் சாரதி ஒருவர் உட்பட பயணிகள் பலர் சிறு காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles