நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களை போதுமான அளவு கையிருப்பில் பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சந்தை, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்ணான்டோ உள்ளிட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பைப் பேணுவதன் மூலம் சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் காட்டி விலையை அதிகரிக்கச் செய்யும் வியாபாரிகளின் திட்டமிட்ட முயற்சிகளை இதன் ஊடாக முறியடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles