நியூசிலாந்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு

” நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல் தொடர்பில் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.” – என்று வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

” பயங்கரவாதம் என்பது ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே அச்சுறுத்தலானது. சில தினங்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதலும் இதனையே உணர்த்துகின்றது. எனவே, பயங்கரவாத அச்சுறுத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம்.

நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இலங்கையிலுள்ள அனைத்து புலனாய்வு பிரிவுகளும் முழு ஒத்துழைப்பையும் வழங்கும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டளையின் பிரகாரம் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்புமீதான தடையை பிரிட்டன் நீடித்தமை வரவேற்கதக்க விடயம் என்பதுடன், இது ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும்.” – என்றும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles