நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ரி – 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ரி20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி பங்களாதேஷின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களையே நியூசிலாந்து அணி பெற்றது.
இதையடுத்து 135 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ரி 20 போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.










