நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகாமைக்கு உண்மை காரணம் இதுவா?

சர்ச்சைக்குரிய “பென்டோரா பேப்பர்ஸ்” தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபசஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்தது.

இருப்பினும், மருத்துவ காரணங்களுக்காக தன்னால் குறித்த தினத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாதெனவும், வேறு ஒரு தினத்தை வழங்குமாறும் அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், விரைவில் அவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles