“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முழு ஆதரவு”

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். எனினும், இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதன்பின்னர் பொதுத்தேர்தல் என்பன நடந்த பின்னரே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது பற்றி நாட்டில் தற்போது கதை அடிபடுகின்றது. இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையிலேயே சில சிவில் அமைப்பு பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு இதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது. தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்றார். அப்போது அவர் இதனை கூறி இருந்தால் எஞ்சிய 16 வாக்குகளை நாம் வழங்கி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி இருக்கலாம்.

ஆனால் நாட்டு மக்கள் தற்போது ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலை எதிர்பார்த்துள்ளனர். மக்களின் அந்த வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்விரு தேர்தல்களும் நடந்து முடிந்த பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles