நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் இல்லாதொழிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு, வழங்கிய வாக்குறுதிகளை சிலர் மறந்துவிடுவர், ஆனால் மேற்படி உறுதிமொழியை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் எனவும் அவர் கூறினார். அத்துடன், நாடாளுமன்ற ஆட்சிமுறைமை பலப்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களை பாதுகாக்கும் ஐஜிபியாக மாறியுள்ளார் எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles