” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்படவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார அறிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக எதிரணிகள் வெளியிடும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். அதனை நீக்குவது தொடர்பில் சட்டமூலம் எதுவும் தற்போது தயாரிக்கப்படவில்லை. தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார். தேசிய தலைவராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார். வெற்றியும் பெறுவார்.” – எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.










