நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து மண்ணை அள்ளி வந்தது சீன விண்கலம்

நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) தரையிறங்கியிருந்த சீனாவின் விண்கலம் அங்கிருந்து மணல் துகள்களை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது விண்வெளி துறையில் மனித குல சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும் கடல் அலையை சீராக வைத்திருப்பதிலும், பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துவதிலும் நிலவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நிலவு குறித்த ஆய்வுகளுக்கு விஞ்ஞானிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவு குறித்த ஆய்வுக்கான ஆர்வத்தை தூண்டியதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. சந்திரயான் திட்டம் உலக நாடுகளின் கவனைத்தை நிலவு பக்கம் திருப்பியது.

யாருமே இதுவரை இறங்காத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை இறக்கி இந்தியா உலக சாதனையை படைத்தது. இதனையடுத்து நிலவு மீது ரஷ்யாவும், ஜப்பானும் அடுத்தடுத்து விண்கலன்களை அனுப்பின. ஆனால், இரண்டும் தோல்வியடைந்தது.

மறுபுறம் சீனா, நிலவு குறித்த மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருந்தது. அதாவது, நிலவின் மற்றொரு பகுதியில் விண்கலத்தை தரையிறக்கி, அங்கிருந்து மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். நிலவுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.

ஒரு பக்கம் எப்போதும் பூமியை பார்த்தவாறு இருக்கும். மறுபக்கம், சூரியனை பார்த்தவாறு இருக்கும். நிலவு தன்னை தானே சுற்றாததால் நம்மால் பூமியிலிருந்து நிலவின் மறு பக்கத்தை பார்க்க முடியாது. எனவே தற்போது வரை உலக நாடுகள் அனைத்தும், நிலவின்-பூமியை நோக்கிய பக்கத்தில் மட்டுமே ஆய்வை மேற்கொண்டிருக்கின்றன. அங்குதான் ரோவர்களையும் தரையிறக்கியுள்ளன.

இப்படி இருக்கையில் மற்றொரு பக்கத்தின் மீதான ஆய்வை சீனா தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘லாங் மார்ச்-5’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான ராக்கெட் தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் ஏவப்பட்டது. இதில் Chang’e-6 எனும் ஆய்வுக் கருவி ரோபோ இணைக்கப்பட்டிருந்தது.

இந்த கருவி நிலவின் மறுபக்கத்தில் (சூரியனை பார்த்துள்ள பகுதி) தரையிறங்கி, அங்கிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பியுள்ளது. இன்று இந்த chang’e -6 எனும் விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,

“கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்துக்கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும். இந்த வெற்றி குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது” என்று கூறியுள்ளனர்.

இந்த மிஷனில் பங்காற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இந்த மிஷன் ஒட்டுமொத்தமாக 53 நாட்கள் நடந்திருக்கிறது. நிலவை பொறுத்தவரை சீனாவுக்கு இது 6வது பயணமாகும். 6வது பயணத்திலேயே இப்படியொரு சாதனையை சீனா படைத்திருப்பது சர்வதேச விண்வெளி உலகில் பேசுபொருளாகியுள்ளது.

அதேபோல, சீனாவின் இந்த வெற்றி அமெரிக்காவை தூண்டிவிட்டிருக்கிறது. நிலவில் முதன் முதலில் காலடி வைத்தது அமெரிக்காதான். ஆனால், அதன் பின்னர் நிலவு குறித்த ஆய்வுகளை அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிட்டது. இப்போது சீனாவின் நடவடிக்கைகளால் ஆர்ட்டெமிஸ் 3 மிஷன் மூலம் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles