நோர்வூட் நியூவெளிகம பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், மூன்று மாத கால சம்பள நிலுவை பணத்தையும், ஒரு வருடத்துக்கான போனஸ் கொடுப்பனவையும் வழங்குமாறுகோரி , ஆடை தொழிற்சாலைக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
” 3 மாதத்துக்குரிய சம்பளத்தையும், வருடத்துக்கான போனஸையும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரங்கள் எமக்கு வழங்காமல், தொழிற்சாலையையும் மூடி விட்டு சென்றுள்ளனர். இதனால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். ” எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், ” நாங்கள் வேறு தொழிற்சாலைக்கு தொழிலுக்கு செல்ல முற்பட்டால் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பத்திரத்தை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். அது காணாமல்போய்விட்டது எனவும் கூறுகின்றனர்.” – எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நோர்வூட் நியூவெளி கம ஆடை தொழிற்சாலை 3 மாத காலமாக மூடப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்
