நிழல் உலக தாதாக்களான ஹரக்கட்டா, குடு சலிந்துவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

மடகஸ்காரிலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை, 90 நாட்கள் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள மேற்படி இரண்டு சந்தேச நபர்களும், தற்போது குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேற்படி நபர்கள் இருவரும், ஜெட் விமானமொன்றின் மூலம் மடகஸ்காருக்கு தப்பிச் சென்றிருந்தனர். இந்நிலையில் இன்டர்போலின் ஒத்துழைப்புடன் மடகஸ்கார் பாதுகாப்புப் படையினர் அவர்களை கைது செய்திருந்தனர்.இதையடுத்து,மடகஸ்காருக்குச் சென்ற குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள், இவ்விருவரையும் நேற்றுமுன்தினம் இலங்கைக்கு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles