நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்

கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் நேற்று (29) பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் அவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார் கடற்படையினர் மீனவ மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles