நீரில் மூழ்கிய அண்ணனும், தங்கையும் சடலங்களாக மீட்பு – ஹாலிஎலயில் சோகம்

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த இரு சிறார்களும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

10 வயது அண்ணனும், 8 வயது தங்கையுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

போகொட கொட்டியாமலுவ பிரதேசத்தில் நேற்று மாலை கடும் மழை பெய்துள்ளது.

தமது வீட்டில் இருந்து, வடிகானுக்கு அப்பால் உள்ள வீடொன்றுக்கு தாய் சென்றிருந்ததால் அவரை அழைத்து வருவதற்காக சென்றவேளையிலேயே சிறார்கள் இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வடிகானை கடப்பதற்கு முற்பட்டவேளை, வடிகானில் நீர் அதிகளவில் வந்தமையால் அவர்கள் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகன்றது.

குறித்த இரண்டு சிறுவர்களும் போகொட வித்தியாலயத்தில் தரம் ஐந்து மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் சகோதரர்கள் ஆவர்.

ஹாலிஎல பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இராணுவமும் வரவழைக்கப்பட்டது.

சிறுவர்களின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன் குறித்த சிறுவர்கள் இருவரும் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இன்று காலை தங்கையின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், முற்பகல்வேளை அண்ணனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ராமு தனராஜ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles