மக்களின் போராட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதி கப்புவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளது.
இதனால், வீதியின் இரு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத மக்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார் வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.