பதுளை மாவட்டத்தின் பம்பரகந்தை நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்ற சுற்றுலாவாசிகள் ஐவர், குளவிக்கொற்றல்களுக்கு இலக்காகி, ஹல்துமுள்ளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹல்துமுள்ளைப் பகுதியின் பம்பரகந்தை நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்றவர்களையே, குளவிகள் கொற்றியுள்ளன. இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரியிலிருந்து நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஐந்து இளைஞர்கள் வந்தனர். அவ்வேளையில் காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. இதனால் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு கலைந்து, குறிப்பிட்ட ஐவரையும் கொற்றத் தொடங்கின.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் தீயைப் பற்ற வைத்து, புகையை எழுப்பியதும் குளவிகள் அகன்றன. இதன்பின்னர் அங்கு கூடியவர்கள் குளவிகள் கொற்றிய ஐவரையும், ஹல்துமுள்ளை அரசினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நிருபர் – எம். செல்வராஜா










