மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 13 அடி உயர்ந்து உள்ளது.
நீர் தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை விட இன்னும் 22 அடி நீர் நிரம்ப வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
135 அடி கொள்ளவை கொண்ட மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 123 அடி நீர் நிறைந்து உள்ளது.
மத்திய மலைநாட்டில் மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் மேலும் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
இதே போல கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது எனவும் இந்த நீர் தேக்கங்களின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
