‘நீர் வழங்கல் சபை தனியார் மயமாகுமா’?

நீர் வழங்கல் சபையை தனியார் மயப்படுத்த விடமாட்டேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். நான் அமைச்சராக இருக்கும் வரை அது நடக்காது. எமது அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அது ஒருபோதும் நடக்காது என்பதே எனது நம்பிக்கையாகும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில்நுட்ப பயிலுனர்கள் 41 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

இன்றைய தினம் நியமனம் பெற்று எம்முடன் நீங்கள் இணைந்தமை நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் தேவையாகும். அதேபோன்று உங்களது வாழ்க்கைக்கும் இந்நியமனம் அவசியமாகும். எமது வாழ்க்கை மற்றும் நாட்டின் எதிர்காலம் என்ற இரண்டும் ஒன்றுதான். எமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவது எமது நாட்டின் எதிர்காலத்திற்கு உதவுவதாகும். அது எமது வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதாகும். இதனை மனதில் வைத்து கடமைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையே நான் சுட்டிக்காட்டினேன்.

நீங்கள் அனைவரும் தொழிற்துறை வாழ்க்கைக்கு பிரவேசிப்பதற்கான நுழைவு வாயிலுக்கு முன் உள்ளீர்கள். இந்த ஜேர்மன் தொழில்நுட்ப திறமையை உலகமே அங்கீகரிக்கும். தொழில் நுட்பவியலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உலகிற்கு எதிர்காலம் இல்லை. மனித இனத்திற்கும் எதிர்காலமில்லை. தொழில்நுட்ப ஞானத்தின் வருகையின் ஊடாக நாம் பரிணாமம் அடைந்து வளர்ச்சி பாதைக்கு வந்துள்ளோம். எனவே அந்த திறமையை கொண்ட நீங்கள் பாரியதொரு பொறுப்பை பொறுப்பேற்கின்றீர்கள். இராணுவத்தின் முன்கள படையணி போன்று தேசிய தேவைக்காக அர்ப்பணிப்பவர்கள் என்ற வகையில் உங்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

நாம் அனைவரும் சகோதரத்துவத்துடனும் சமத்துவதுடனும் வாழ்வதற்கான கலாச்சாரத்தை கட்டியெழுப்பி வருகிறோம். நாம் சமத்துவத்துடன் ஒருவருக்கு ஒருவர் சகோதரர் என அழைத்து கொள்கிறோம். தராதரம் பாராமல் சமத்துவத்துடன் வரவேற்கிறோம். இதன்பிரகாரம் நாம் வாழ்வதற்கு முயற்சிக்கிறோம். நான் இது தொடர்பில் என்னுடைய பணிகளை முன்னெடுத்து வருகிறேன் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles