நுவரெலியாவில் ஐந்து தமிழர்கள் வெற்றி பெறுவது உறுதி!

ஜனாதிபதி தேர்தல்களிலிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளார்கள். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியாமாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மூன்று பேரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அட்டன் செனன் தோட்டத்தில் இடம் பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மலைய மக்களைப் பொருத்தவரையில் இது முக்கியமான ஒரு தேர்தலாகும். வடக்கு, கிழக்குக்கு வெளியே நுவரெலியா மாவட்டத்தில்தான் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச போன்ற வேட்பாளர்கள் மாவட்டத்தில் அதி கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் ஆதரவு தெரிவித்திருந்த ஜனாதிபதி வேட்பாளர் அஜித் பிரேமதாசவுக்கே கூடுதலான வாக்குகள் கிடைத்திருந்தது. எனவே நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்து காணப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்கு 50 வீதத்துக்கும் குறைவான 42 சத வீத வாக்குகளே கிடைத்திருந்தது.

நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அரசாங்கம் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்காது. எதிரணியில் 120 ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. ஏனெனில், ஒரு மாத காலத்திலேயே ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்த வாக்காளர்கள் அதிருப்தி கொண்ட நிலையில் இருக்கின்றார்கள் குறிப்பாக ஆசிரிய சமூகம் அதிருப்தி கொண்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 300 க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் அதில் பெருமளவு சுயேச்சை குழுக்களின் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல, மாறாக தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு வாக்குகளைப் பிரிப்பதே அவர்களின் நோக்கமாகும்.

எது எப்படி இருப்பினும் இந்த மாவட்டத்தில் ஐந்து தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது. அதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

அதேநேரம், மாவட்டத்தில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். தேர்தல் காலத்தில் மட்டும் வந்து மக்களிடம் வாக்கு கேட்கும் அவர்கள் இதுவரை இங்குள்ள மக்களுக்கு செய்த சேவைகள் என்ன என்று கேட்டுப் பார்த்தால் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும்.

எனவே அறிமுகம் இல்லாத, இனிமேல்தான் சேவை செய்வோம் என்று கூறுகின்ற வேட்பாளர்களுக்கா, அல்லது இதுவரை காலமும் மக்களுக்கு சேவை செய்து அவர்களின் சுக துக்கங்களில் இரண்டற கலந்துள்ள வேட்பாளர்களுக்கா வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களே சிந்தித்து ஒற்றுமையாக முடிவெடுக்க வேண்டும் என்றார்.

க.கிஷாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles